மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை

விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என காவல்துறை பதிலளித்துள்ளது.
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகர காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். ‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை’ என சென்னை காவல்துறை இன்று பதிலளித்துள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com