கேரள கன்னியாஸ்திரிகள் போராட்டம் - பாதிரியாருக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பாதிரியாருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ ஜார்ஜ் பேசிய கருத்து சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது. #JalandharBishop #FrancoMulackal #MLAGeorge #Kerala
கேரள கன்னியாஸ்திரிகள் போராட்டம் - பாதிரியாருக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து
Published on

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார், ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் கூறிய கருத்து கடும் சர்ச்சைக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறுகிறார். 12 முறை வன்கொடுமை செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை வன்கொடுமை செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com