காங்கிரசை தீர்த்துக்கட்ட சோனியா, ராகுலே போதும் - சாக்‌ஷி மகராஜ் எம்.பி. சொல்கிறார்

காங்கிரசை தீர்த்துக்கட்ட சோனியா காந்தியும், அவருடைய மகன் ராகுல்காந்தியுமே போதும் என பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் கூறியுள்ளார்.
பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ்
பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ்
Published on

நாக்பூர்:

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு சென்றார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்.

பிறகு, சாக்‌ஷி மகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு அதன் செயல்பாடுகளே காரணம்.

காங்கிரசை தீர்த்துக்கட்ட சோனியா காந்தியும், அவருடைய மகன் ராகுல்காந்தியுமே போதும். வேறு யாரும் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. நாட்டில் எதிர்க்கட்சியே இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com