80 வயதான மூத்த குடிமக்களுக்கு விலக்கு: பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் தேவையில்லை

பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து 80 வயதான மூத்த குடிமக்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.
80 வயதான மூத்த குடிமக்களுக்கு விலக்கு: பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் தேவையில்லை
Published on

‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை கோரி விண்ணப்பிக்கிறவர்கள் ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆனால் 80 வயதான மூத்த குடிமக்களுக்கு இதில் இருந்து இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை கேட்டு விண்ணப்பிக்கிறபோது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com