மாணவர் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது இனி 'ஜெய் ஹிந்த்' கூற வேண்டும்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பிரசன்ட் என்பதற்கு பதிலாக இனி 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என பள்ளி கல்வித்துறை மந்திரி விஜய் ஷா தெரிவித்தார்.
மாணவர் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது இனி 'ஜெய் ஹிந்த்' கூற வேண்டும்
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேசியக்கொடி ஏற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பிரசண்ட் என்பதற்கு பதிலாக இனி 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி இந்த முறையானது சட்னா மாவட்டத்தில் முதன்முதலாக அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதன் பிறகு நவம்பர் 1-ம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் அமல்படுத்தப்படும் என கல்வித்துறை மந்திரி விஜய் ஷா தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை அதிகப்படுத்தலாம். ஜெய் ஹிந்த் என கூறுவது அனைத்து மத மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இது இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க உதவும் என விஜய் ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com