இனிமேல் இவர்கள் யாரும் போராட கூடாது - மத்திய அரசு அதிரடி

இனிமேல் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட கூடாது என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
போராட்டம்
போராட்டம்
Published on

இந்தியாவில் செயல்படும் அமைப்புகள், மாணவர் சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு திடீர் மாற்றம் கொண்டு வந்து உள்ளது.

அதன்படி வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட கூடாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் வெளிநாட்டு நிதி உதவியினை பெற முடியாது என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com