

கோவை:
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த 2015-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிஐ விசாரணை கோரி விஷ்ணுப்பிரியாவின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.
2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 16-ம் தேதி விசாரணை அறிக்கையை கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. விஷ்ணுப்பிரியா கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கை முன்னெடுத்து செல்லமுடியவில்லை. இதனால், வழக்கு கைவிடப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது. #CBI #VishnuPriya #DSPVishnuPriya