மங்கோலியா அதிபர் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை: மறுவாக்குப்பதிவு

மங்கோலியா அதிபர் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக 2-வது சுற்று தேர்தல் நடைபெற இருக்கிறது.
மங்கோலியா அதிபர் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை: மறுவாக்குப்பதிவு
Published on

மத்திய ஆசிய நாடான மங்கோலியாவில் அதிபராக உள்ள எல்பெக்டோர்ஜ் சகியாபின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஒருவர் இரண்டு முறைக்குமேல் அதிபர் ஆக முடியாது என்பதால் ஆளும் மங்கோலியா மக்கள் கட்சி சார்பில் என்க்போல்ட் மியீகோம்போ, முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் பட்டுல்கா கல்ட்மாவும், மங்கோலியா மக்கள் புரட்சிகர கட்சி சார்பில் கன்பாடர் சைன்கு ஆகிய மூவரும் அதிபர் தேர்தலில் பலப்பரீட்சை நடத்தினர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், அந்நாட்டின் பொது தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கையை தொடங்கியது. தொடக்கம் முதலே எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் பட்டுல்கா கல்ட்மா அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். என்றாலும் வெற்றி பெறுவதற்கான குறிப்பிட்ட சதவீத வாக்குகளை அவர் பெறவில்லை.

இதனால் 2-வது கட்ட வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் குழு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தலில் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடப்பது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com