மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: குறை கூறுபவர்களுக்கு நிதிஷ்குமார் கடும் கண்டனம்

குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என குறை கூறுபவர்களுக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: குறை கூறுபவர்களுக்கு நிதிஷ்குமார் கடும் கண்டனம்
Published on

பாட்னா:

குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என குறை கூறுபவர்களுக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் இன்று நடைபெற உள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. முறைகேடு செய்துள்ளது என குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முதல் மந்திரி நிதிஷ்குமார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என கூறியவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. தோல்வி பயம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com