அரசியலின் அடிச்சுவடி அறியாதவர் தேஜஸ்வி - நிதிஷ்குமார் தாக்கு

பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர் நிதிஷ் குமார், அரசியலின் அடிச்சுவடி அறியாதவர் என தேஜஸ்வி யாதவை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும், மாநில முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ராஜ்யசபா உறுப்பினரான பஷிஷ்தா நரேன் சிங்கை மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசுகையில், சிலர் விளம்பரத்துக்காக என்னை தாக்கிப் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் அரசியலின் அடிச்சுவடியை அறியாதவர். அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு நான் சில சமயம் சிரித்து விடுவேன். அதனால் நான் காயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com