உத்தரகாண்ட் - போர் விமான விபத்தில் பலியான பைலட் குடும்பத்துடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

பெங்களூருவில் இந்திய விமானப்படை விமானம் விழுந்த விபத்தில் பலியான பைலட்டின் குடும்பத்தினரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #IAFAircraftCrashes #NirmalaSitharaman
உத்தரகாண்ட் - போர் விமான விபத்தில் பலியான பைலட் குடும்பத்துடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
Published on

டேராடூன்:

பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் கடந்த ஒன்றாம் தேதி இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் சித்தார்த் நேகி மற்றும் சமீர் அப்ரால் ஆகிய 2 பைலட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டனர். 

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது. விமானம் தரையை நெருங்கியபோது 2 விமானிகளும் வெளியே குதித்தனர். இதில் பலத்த காயமடைந்த பைலட் சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைலட் சமீர் அப்ரால், பலத்த காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். விமான விபத்து குறித்து பெங்களூரு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இந்திய விமானப்படை விமானம் விழுந்த விபத்தில் பலியான பைலட் சித்தார்த் நேகியின் குடும்பத்தினரை டேராடூனில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

டேராடூனில் உள்ள பைலட் சித்தார்த் நேகியின் வீட்டிற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளித்தார். அவருடன், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத்தும் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். #IAFAircraftCrashes #NirmalaSitharaman

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com