மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: ஜூன் 6-ந்தேதி வரை நிர்மலாதேவிக்கு காவல் நீட்டிப்பு

தனியார் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜூன் 6-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #Nirmaladevi
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: ஜூன் 6-ந்தேதி வரை நிர்மலாதேவிக்கு காவல் நீட்டிப்பு
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவரது காவல் முடிவடைந்தது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியை விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.2) ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, வருகிற 6-ந் தேதிவரை நிர்மலா தேவிக்கு காவலை நீட்டித்து உத்தரவிட்டார். #Nirmaladevi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com