நிர்மலாதேவி வழக்கு- விருதுநகர் கோர்ட்டில் இன்று இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகர் மாவட்ட 2-வது கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா, இன்று நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
நிர்மலாதேவி வழக்கு- விருதுநகர் கோர்ட்டில் இன்று இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் படி ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான 3 பேரும் விருதுநகர் மாவட்ட கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு பல முறை மனுத்தாக்கல் செய்தனர்.

குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்ததால் இதுவரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் 1,160 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி இறுதி குற்றப்பத்திரிகையை வருகிற 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா, விருதுநகர் மாவட்ட 2-வது கோர்ட்டில் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். #NirmalaDevi #NirmalaDeviCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com