நிர்மலாதேவி மீதான வழக்கு 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவி மீதான வழக்கை 26-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நிர்மலா தேவி
நிர்மலா தேவி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்து விலகிக்கொண்டார். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 26-ந்தேதி 3 பேரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com