நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனு தள்ளுபடி- தண்டனையை நிறைவேற்ற தடையில்லை

நிர்பயா வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி அவர்கள் நாளை தூக்கிலிடப்படுவார்கள் என தெரிகிறது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
Published on

புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால்  தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர். 

அவ்வகையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், சம்பவம் நடந்த அன்று தான் டெல்லியில் இல்லை என்ற வாதத்தை கீழ் நீதிமன்றங்கள் தவறாக நிராகரித்துவிட்டதாக கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்காமலேயே, இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே குற்றவாளிக்கு அனைத்து சட்ட வாய்ப்புகளும் வழங்கப்பட்டுவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றமும் கூறிவிட்டது. எனவே, 4 பேரும் நாளை தூக்கிலிடப்படுவார்கள் என தெரிகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com