நிரவ் மோடியை வீடியோ கான்பரன்சிங் மூலம் லண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு

லண்டனில் கைது செய்யப்பட்ட இந்திய தொழிலதிபர் நிரவ் மோடியை, வீடியோ கான்பரன்சிங் மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். #NiravModi #UKCourt
நிரவ் மோடியை வீடியோ கான்பரன்சிங் மூலம் லண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு
Published on

லண்டன்:

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாயினர்.

இந்தநிலையில் இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அங்கு புதிதாக வைர வியாபாரம் செய்வதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.

ஏற்கனவே இவரை நாடுகடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

நிரவ் மோடியை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்கும்படி லண்டன் கோர்ட்டில் இந்தியா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

அப்போது அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக மாட்டார். மாறாக அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையின் போது நிரவ்மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #NiravModi #UKCourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com