நிரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்

நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வருகிற 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நிரவ் மோடி
நிரவ் மோடி
Published on

லண்டன் :

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவர் கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வருகிற 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்காக அவர் காணொலி காட்சி மூலம் ஆஜராவார் என தெரிகிறது. அதே நேரம் அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com