நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். திராவிடமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை நீலகிரி மாவட்டம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டாடுவது, 3-ந் தேதி அன்று நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசளிப்பது, 95 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, ஜூன் 5-ந் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளைகளில் கொண்டாடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com