தூய்மை பணியாளர்கள் நிவாரண உதவி பெற விவரங்களை தெரிவிக்க வேண்டும்- கலெக்டர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் நிவாரண உதவி பெற அடையாள அட்டை விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலமாக 2008-ஆம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது. 

இந்த அடையாள அட்டை வைத்திருப்போர் தற்போது பணியில் இருந்தாலும் ஓய்வில் இருந்தாலும் அதன் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்று பயன்பெறுவதற்கு மாவட்ட மேலாளருக்கு (தாட்கோ) தெரிவிக்க வேண்டும். நேரில் வராமல் செல்போன் எண் 9445029469 அல்லது மின்னஞ்சல் dmtahdcooty@gmail.com ஆகியவை மூலம் விவரங்களை தெரிவிக்கலாம். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com