மண் அள்ளிய வாலிபர் மீது வழக்கு

நிலக்கோட்டை அருகே மண் அள்ளிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

அய்யலூர் அருகே உள்ள குருந்தம்பட்டி பகுதியில், வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 24) என்பவர் டிப்பர் லாரியில் மண் அள்ளி கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அருண்குமார் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com