டெல்லியில் ரூ.1½ கோடி மோசடி - நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது

டெல்லியில் மோசடி திட்டத்தை அறிமுகம் செய்து பலரை ஏமாற்றி ரூ.1½ கோடியை சுருட்டிய நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் ரூ.1½ கோடி மோசடி - நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது
Published on

புதுடெல்லி:

டெல்லியில் ஒரு மோசடி திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் பலரை ஏமாற்றி ரூ.1½ கோடியை சுருட்டிய நைஜீரியா நாட்டை சேர்ந்தவர், போலீசில் சிக்கினார்.

அவரிடம் ஏமாந்தவர்களில் 2 பேர் டெல்லி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இணையதள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து புகாருக்கு ஆளான நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, தென் மாநிலங்களை சேர்ந்த அப்பாவி மக்களை தனது மோசடி திட்டங்கள் மூலம் ஏமாற்றி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com