நைஜீரியா: சர்ச்சில் நுழைந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி

நைஜீரியா நாட்டில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியா: சர்ச்சில் நுழைந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி
Published on

அபூஜா:

நைஜீரியா நாட்டின் ஒனிட்ஷா நகரின் அருகில் ஒழுபுலுவில் உள்ள செயின்ட் பிலிப் கத்தோலிக்க சர்ச்சில் நூற்றுக்கும் மேலானோர் பிராத்தனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது சர்ச்சினுள் துப்பாக்கியுடன் நுழைந்த ஐந்து தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர் கூறுகையில், முகமூடி அணிந்து வந்த 5 பேர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், நைஜீரியா மற்றும் கேமரூன் நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்திவரும் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com