நைஜீரியா: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 9 பேர் பலி

நைஜீரிய பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் (கோப்பு படம்)
பயங்கரவாதிகள் (கோப்பு படம்)
Published on

அபுஜா:

ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். 

இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவையும் மாலி நாட்டையும் இணைக்கும் எல்லையோர பகுதியினான தில்லபேரி மாகாணத்தின் அயுரோவ் என்ற பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நைஜீரிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நைஜீரிய படைகள் அதிரடியாக வான்வெளி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com