நிதாஹாஸ் முத்தரப்பு தொடரை வெல்ல இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு - ஜெயவர்தனே

வங்காள தேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என ஜெயவர்தனே கூறியுள்ளார். #NidahasTorphy #INDvBAN
நிதாஹாஸ் முத்தரப்பு தொடரை வெல்ல இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு - ஜெயவர்தனே
Published on

இன்றிரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனும் ஆன ஜெயவர்தனே கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘வங்காள தேச அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவிற்கு எதிராக எல்லாமே அந்த அணிக்கு லாபம்தான். அவர்கள் வளர்ந்து வரும் அணி என்பதால், மகிழ்ச்சியாக எந்தவொரு நெருக்கடியும் இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவார்கள்.

இந்திய சில முன்னணி வீரர்களை இழந்திருக்கலாம். ஆனால், தற்போது அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அனைத்து துறையிலும் இந்திய அணி சிறப்பான வகையில் உள்ளது. வங்காள தேசத்தை விட இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் இரு அணிகளும் சமமாகத்தான் உள்ளது. வங்காள தேசத்தில் உள்ள டாப் ஆர்டர் அனுபவ வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக சேதங்களை விளைவிக்கக் கூடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com