இந்தியாவின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்

நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #INDvBAN #NidahasTrophy
இந்தியாவின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்
Published on

இன்று 2-வது ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதல் ஆட்டத்தில் விளையாடிய 1. ரோகித் சர்மா, 2. தவான், 3. சுரேஷ் ரெய்னா, 4. மணிஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. ரிஷப் பந்த், 7. விஜய் சங்கர், 8. வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. சர்துல் தாகூர், 11. உனத்கட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தமிம் இக்பால், 2. சவுமியா சர்கார், 3. மெஹ்முதுல்லா, 4. முஷ்பிகுர் ரஹிம், 5. லித்தோன் தாஸ், 6. சபீர் ரஹ்மான். 7. மெஹிது ஹசன், 8. நஸ்முல் இஸ்லாம், 9. ருபெல் ஹொசைன், 10. தஸ்கின் அஹமது. 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.

வங்காள தேசத்தின் தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், தமிம் இக்பால் 15 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com