செய்திகள்
இலங்கைக்கு எதிரான டி20யில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. #NidahasTrophy
இலங்கையில் நிதாஹாஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஆட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். இன்று மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மழை நின்றதும் ஆட்டம் 8.20 மணிக்கு தொடங்கும் என்றும், 19 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 8.05 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் சண்டிமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சுரங்கா லக்மல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ரிஷ் பந்த் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். #NidahasTrophy

