

திருப்பூர்:
திருப்பூர் வெள்ளியங்காடு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் (36). பனியன் தொழிலாளி. இவர் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு போன் செய்து வட மாநிலங்களில் குண்டு வெடிக்கும். தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது தொடர்பாக டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் வெள்ளியங்காடு விரைந்து சென்று வெடி குண்டு மிரட்டல் விடுத்த பொன்ராஜை கைது செய்தனர்.
அப்போது அவர் இதுவரை 8 முறை இவ்வாறு தகவல்களை பரப்பியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.