

ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தேசிய புலானாய்வு அமைப்புனர் (என்.ஐ.ஏ) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் வீட்டில் சில அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இன்று சுமார் 36,34,78,500 ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.