நியூயார்க்கில் திட்டமிட்டபடி மாரத்தான் ஓட்டம் நடைபெறும் - மேயர் உறுதி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரியை ஓட்டி பொதுமக்கள் 8 பேரை கொன்ற நிலையிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி மாரத்தான் போட்டி நடைபெறும் என மேயர் பிளாசியோ தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் திட்டமிட்டபடி மாரத்தான் ஓட்டம் நடைபெறும் - மேயர் உறுதி
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரியை ஓட்டி பொதுமக்கள் 8 பேரை கொன்ற நிலையிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி மாரத்தான் போட்டி நடைபெறும் என மேயர் பிளாசியோ தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகில் உள்ள பள்ளியருகே லாரி ஓட்டி வந்து மக்கள்கூட்டத்தின் மீது வேகமாக மோதியதில் 8 பேர் பலியானகினர். மன்ஹாட்டனில் நடந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட முக்கிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நியூயார்க்கில் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள மாரத்தான் போட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என மேயர் பிளாசியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குறிப்பிட்ட தினத்தில் திட்டமிட்டபடி மாரத்தான் போட்டி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அது ஒரு சிறப்பான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க் மாரத்தான் போட்டியில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com