உங்கள் தேசத்தை காப்பதில் தோற்றுவிட்டீர்கள்: தாக்குதலுக்கு முன் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஆசாமி

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பேருந்து முனையத்தில் தாக்குதல் நடத்திய வங்காளதேச ஆசாமி, பேஸ்புக்கில் அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் தேசத்தை காப்பதில் தோற்றுவிட்டீர்கள்: தாக்குதலுக்கு முன் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஆசாமி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பேருந்து முனையத்தில் தாக்குதல் நடத்திய வங்காளதேச ஆசாமி, பேஸ்புக்கில் அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் (உள்ளூர் நேரப்படி) நேற்று முன்தினம் திடீரென  மர்மப் பொருள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட பெரும் ஓசையால் அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காயங்களுடன் கிடந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் வங்காள தேசத்தை சார்ந்தவர் என்பதும், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளராக இருந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நடத்திய அந்த ஆசாமி, பேஸ்புக்கில் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவன் பேஸ்புக்கில் கூறுகையில், டிரம்ப் நீங்கள் உங்கள் நாட்டை பாதுகாப்பதில் தோற்றுவிட்டீர்கள் என எச்சரிககை விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அவன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு அவனை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com