கர்நாடகா - புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு

கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை பதவியேற்க உள்ளனர்.
விதான் சவுதா
விதான் சவுதா
Published on

பெங்களூரு:

கர்நாடகா சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின.

இந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை பதவியேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக வெளியான செய்தியில், கர்நாடகா சட்டசபை விதான் சவுதாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்களும் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளனர். சபாநாயகர் விஷ்வேஷ்வரா ஹெக்டே, முதல் மந்திரி எடியூரப்பா உள்பட பலர் இதில் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com