சுஜித் குடும்பத்திற்கு தனது முதல் மாத சம்பளத்தை வழங்கும் எம்.எல்.ஏ

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த குழந்தை சுஜித் வில்சனின் குடும்பத்தினருக்கு தனது முதல் மாத சம்பளத்தை வழங்க உள்ளதாக புதுச்சேரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், தாயுடன் குழந்தை சுஜித்
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், தாயுடன் குழந்தை சுஜித்
Published on

புதுச்சேரி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அவனை மீட்கும் பணிகள் 80 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

இதையடுத்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உடல் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது, பிரேத பரிசோதனை முடிந்து சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. பல்வேறு அரசியல் தலைவர்கள் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான் குமார், தனது முதல் மாத சம்பளத்தை சுஜித்தின் குடும்பத்தாருக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com