குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி புதுக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் (கோப்புப்படம்)
ஆர்ப்பாட்டம் (கோப்புப்படம்)
Published on

சென்னை:

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து சமீபத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாகாண பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.

இதையடுத்து சென்னையிலும் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 250 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். சிறுபான்மையினர் உரிமையை பறிக்கும் இந்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.

நீதி கிடைக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டு இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் திடீர் போராட்டத்தால் இந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வராத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com