குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய தந்தை

டெல்லி சஃப்தார்ஜங் மருத்துவனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையின் உடலை தந்தை குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய தந்தை
Published on

டெல்லி சஃப்தார்ஜங் மருத்துவனையில் உள்ள குப்பைத்தொட்டியில் புதியதாக பிறந்த பெண் குழந்தையின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

குழந்தையின் உடலில் மருத்துவமனை சார்பாக கட்டப்படும் டேக்கில் உள்ள விவரங்களின் அடிப்படையில் குழந்தையானது கடந்த சனிக்கிழமை இரவு பிறந்தது தெரிய வந்தது. மேலும் குழந்தை இறந்த நிலையிலேயே பிறந்துள்ளது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குழந்தை குறைப்பிரசவத்தில் இறந்தே பிறந்ததால் தந்தையே குப்பைத்தொட்டியில் வீசியது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com