ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. #HappyNewyear ##HappyNewyear2018
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

சென்னை:

ஆங்கில புத்தாண்டு-2018 நேற்று நள்ளிரவு பிறந்தது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்களுடன் வாகனங்களில் உற்சாகமாக சீறிப் பாய்ந்தனர். 

இதேபோல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதனால் நள்ளிரவில் தேவாலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்.

இதேபோல் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புத்தாண்டு சிறப்பானதாக அமைய வேண்டும் என பொதுமக்கள் வேண்டிக்கொண்டனர். 

புத்தாண்டு பிறக்கும் வேளையில் நள்ளிரவில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  #HappyNewyear ##HappyNewyear2018 #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com