

ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. பொன்னேரியில் தண்ணீர் கேன் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து உள்ளார்.
இதன் அலுவலகம் புதுவண்ணாரப்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ளது. நேற்று இரவு பார்த்தசாரதி அலுவலகத்தை பூட்டிச் சென்றார்.
இன்று காலை திரும்பி வந்ததும் அலுவலக ஷட்டர் பூட்டு உடைந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதே பகுதியில் மற்றொரு இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #Tamilnews