தண்ணீர்கேனை தலையில் வீசி ஆட்டோ டிரைவர் கொலை

தண்ணீர்கேனை தலையில் வீசி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொலை
கொலை
Published on

ராயபுரம்:

புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 50) ஆட்டோ டிராவர். அதே பகுதி சேனி அம்மன் கோவில் அருகே செல்போன் கடை நடத்தி வரும் வாசு என்பவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கினார்.

தினமும் 50 ரூபாய் வீதம் 2,500 கொடுத்து வந்தார். பின்னர் கடன் தொகையை கொடுக்க வில்லை. இதனால் ஸ்ரீதர்-வாசு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடை முன்பு சென்ற ஸ்ரீதரை அழைத்து வாசு பணம் கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த வாசு அருகில் இருந்த தண்ணீர் கேனை எடுத்து ஸ்ரீதரின் தலை மீது வீசினார். இதனால் ஸ்ரீதரின் தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடைக்காரர் வாசுவை கைது செய்தனர்.

ரூ.2500 பணத்துக்காக ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com