சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக சத்ருகன புஜாஹரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக சத்ருகன புஜாஹரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் இதுவரை 53 பேர் நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த சத்ருகன புஜாஹரி சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

இதையடுத்து, சத்ருகன புஜாஹரி வரும் 20-ம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது நியமனத்தை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

சத்ருகன புஜாஹரி ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com