மனைவி பிரிந்து சென்றதால் மதுவுக்கு அடிமையான புதுமாப்பிள்ளை - கால்வாயில் தவறி விழுந்து பலி

திருச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால் மதுவுக்கு அடிமையான புதுமாப்பிள்ளை மதுபோதையில் கால்வாயில் தவறி விழுந்து பலியானர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருச்சி:

திருச்சி லால்குடி நெற்குப்பை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது30). இவரது மனைவி மரியா ( 25) . இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மரியா, கணவரை பிரிந்து, திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையடைந்த ராஜேஷ்குமார் தினமும் மது குடித்து வந்தார்.

நேற்றிரவு மதுபோதையில் இருந்த ராஜேஷ்குமார் வாய்க்கால் பகுதியில் செல்லும் போது, திடீரென தண்ணீரில் விழுந்தார். போதையில் இருந்ததால் அவர் தண்ணீர் மூழ்கி பலியானார்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து, உடனடியாக லால்குடி போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று, ராஜேஷ்குமார் உடலை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com