சாக்லெட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டு அறிமுகம்

சாக்லெட் பழுப்பு (பிரவுன்) நிறத்தில் புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சாக்லெட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டு அறிமுகம்
Published on

மும்பை:

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு பதிலாக புதிய 2000, 500, 200, 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சாக்லெட் பழுப்பு (பிரவுன்) நிறத்தில் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று  அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘மகாத்மா காந்தி படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். ரூபாய் நோட்டு சாக்லெட் பிரவுன் நிறத்தில் இருக்கும். ரூபாய் நோட்டின் மத்தியில் மகாத்மா காந்தி படமும், வலது புறத்தில் அசோக சின்னமும் இடம்பெற்றிருக்கும். புதிய ரூபாய்  நோட்டுக்கள் அறிமுகமானாலும் பழைய 10 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து  புழக்கத்தில் இருக்கும். ரூபாய் நோட்டின் பின்புறம் இடது பக்கத்தில் ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு மற்றும் வாக்கியம், கோனார்க் கோயில் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்’ என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு புதிய 10 ரூபாய் நோட்டின் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com