அளவு வித்தியாசப்படுவதால் ஏ.டி.எம். எந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் உடனே கிடைக்காது

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ.200, ரூ.50 நோட்டுகளின் அளவு வித்தியாசப்படுவதால் ஏ.டி.எம். எந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் உடனே கிடைக்கவில்லை.
புதிய ரூ. 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள்
புதிய ரூ. 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள்
Published on

சென்னை:

ரிசர்வ் வங்கி புதிய 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளது. இதில் 50 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துவிட்டன.

விடுமுறை நாட்களாக இருப்பதால் 200 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளை சென்றடையவில்லை. நாளை மறுநாள் முதல் வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு புதிய நோட்டுகளும் ஏ.டி.எம். எந்திரங்களில் உடனே கிடைக்காது. காரணம் இந்த நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் அளவில் மாறுபட்டுள்ளது.

50 ரூபாய் நோட்டுகள் 66 மி.மீ உயரம் மற்றும் 135 மி.மீட்டர் அகலம் கொண்டதாகும், 200 ரூபாய் நோட்டு 66 மி.மீட்டர் உயரம் மற்றும் 146 மி.மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. 200 ரூபாய் நோட்டுகள் இப்போதுதான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த நோட்டுகளை வழங்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களை வடிவமைக்க வேண்டும். இந்த பணிகள் முடிய 10 நாட்களுக்கு மேல் ஆகும். அதன் பிறகுதான் ஏ.டி.எம். எந்திரங்களில் கிடைக்கும். ஆனால் வங்கிகளில் முன்னதாகவே கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com