ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் தியூபா

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அரசு முறைப் பயணமாக 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தியூபாவை சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.
ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் தியூபா
Published on

காத்மாண்டு:

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருடன், 4 அமைச்சர்களும், 12 சட்ட உறுப்பினர்கள் கொண்ட குழு வருகை புரிந்துள்ளது. பிரதமர் தியூபா உடன் அவரது மனைவி அர்ஜு ரானா தியூபாவும் உடன் வந்துள்ளார்.

விமானம் மூலம் தலைநகர் புதுடெல்லி வந்த பிரதமர் தியூபாவை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். தியூபா தனது பயணத்தின் போது, இந்தியாவுடனான பஞ்சேஷ்வர் திட்டம் பற்றி ஆலோசனை செய்ய உள்ளார் என்று அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்திய தொழிலதிபர்கள் மாநாட்டில் தியூபா இன்று உரையாற்றுகிறார். நாளை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

தனது பணிகளை நிறைவு செய்த பிறகு தியூபா, பீகாரில் உள்ள புத்தகயா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் தியூபாவின் வருகை மூலம் இந்தியா-நேபாளம் இடையேயான உறவு வலுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com