நெல்லிக்குப்பம் அருகே மருந்து விற்பனையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

நெல்லிக்குப்பம் அருகே மருந்து விற்பனையாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நெல்லிக்குப்பம் அருகே மருந்து விற்பனையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கோண்டூர் செந்தமிழ்சேய் நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சுகுமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இந்த நிலையில் சென்னைக்கு சென்றிருந்த சுகுமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சுகுமார் நெல்லிகுப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com