நெல்லை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை தாங்கினார். முற்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதனைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் அரசுக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், நிர்வாகிகள் பாஸ்கர், ஜெயக்குமார், செல்வராசு, சங்கரன், தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com