நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

பேரிகையில் நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வால் பாதிப்படைந்து மரணம் அடைந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
Published on

ஓசூர்:

பேரிகையில் நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வால் பாதிப்படைந்து மரணம் அடைந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரிகை தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் துக்காராம், மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் பாஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பேச்சாளர் நவுசாத், முன்னாள் ஊராட்சி தலைவர் நாராயணப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நீட் தேர்வை எதிர்ப்பு குறித்த துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com