ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை: பழ.நெடுமாறன் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை: பழ.நெடுமாறன் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
Published on

திருச்சி:

திருச்சியில் இன்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

காவேரி பிரச்சினையில் ஒற்றை நடுவர் மன்றம் அமைப்பதால் காவேரி பிரச்சனையில் விவசாயிகள் பாதிக்கபடுவார்கள். காவேரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கும் படி உச்ச நீதி மன்றம் போட்ட உத்தரவை செல்லாமல் ஆக்கவே ஒற்றை நடுவர் மன்றம் அமைக்க பா.ஜனதா அரசு முயற்சித்து வருகிறது. இதை கைவிட வேண்டும்.

அது போல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். இந்தியை திணிக்க கூடாது. மதுரை கீழடியில் அகழ்வாராய்ச்சியை முற்று புள்ளி வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 31- ந் தேதி தமிழ் தேசிய அமைப்புகள் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்.

இதில் தமிழ் தேசிய அமைப்புகள் கலந்து கொள்கிறது. பல்கலை கழகங்களில் மத்திய அரசு கவர்னர் மூலமாக தனது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. இதை மாநில அரசும் கண்டிக்காமல் உள்ளது. தமிழகம் உள்பட பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் தன்னுடைய அதிகாரத்தை பயன் படுத்த முயற்சிக்கிறது. இதை மோடி அரசு கைவிட வேண்டும்.தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் சுய நலன்களையும், கட்சி நலனையும் பார்ப்பதால் மட்டுமே இந்த நிலை நிலவுகிறது. தலைவர்களில் ஒற்றுமை இல்லாததால் இந்த நிலை. இது மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com