கனமழை எதிரொலி: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணியை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை வரும் 4-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குழுவுக்கு 45 பேர் இருப்பார்கள் என்றும் தேவைக்கேற்ப மீட்புக்குழுவின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களில் இந்த வீரர்கள் தங்க வைக்கப்படுள்ளதாகவும், படகு உள்ளிட்ட மீட்புப்பணிக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com