நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை - 2 போலீசார் பலி, 6 பேர் காயம்

போலீஸ் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் குண்டு காயம் அடைந்து இறந்தனர். ஒரு அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை
நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை
Published on

ராய்ப்பூர்:

சத்தீ‌‌ஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் இராபள்ளி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய ஆயுதப்படை போலீசாரின் கோப்ரா படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் விகாஸ்குமார், பர்னந்த் சாஹு என்ற 2 போலீசார் குண்டு காயம் அடைந்து இறந்தனர். ஒரு அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். 2 மணி நேர சண்டைக்கு பின்னர் நக்சலைட்டுகள் காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பினர். சண்டையில் ஒரு நக்சலைட்டும் கொல்லப்பட்டார். அவரது உடல் அருகில் இருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. காயமடைந்த போலீசார் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ராய்ப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com