சத்தீஸ்கர்- பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டான்

சத்தீஸ்கரின் பீஜப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் நக்சல் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படைவீரர்கள்
தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படைவீரர்கள்
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள புன்னூர் கிராமத்தில் நக்சல்கள் சிலர் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நக்சல்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுடத்தொடங்கினர். இந்த தாக்குதலில் நக்சல் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com