சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரால் நக்சல் கமாண்டர் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தேடப்பட்டு வந்த நக்சலைட் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்தனர். #NaxalAttack
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரால் நக்சல் கமாண்டர் சுட்டுக் கொலை
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் மட்வி முய்யா என்ற ஜோகா குஞ்சம் (29), என்ற நக்சலைட் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டான்.

விசாரணையில், அவர் 2017, ஏப்ரல் 24-ம் தேதி சுக்மா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி 25 படைவீரர்கள் பலியானதில் தொடர்புடையவர் என்பதும், அவரது தலைக்கு 8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #NaxalAttack

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com